வேடசந்தூர் அருகே அரசு பள்ளி சத்துணவு மையத்தில் கேஸ் சிலிண்டர் வெடிப்பு
திண்டுக்கல் வேடசந்தூரை அடுத்த பாலப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியின் சத்துணவு மைய கட்டிடத்தில் திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்தது.இதுகுறித்து குஜிலியம்பாறை தீயணைப்புநிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேடசந்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.அதிர்ஷ்டவசமாக இந்த சிலிண்டர் வெடிப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
No comments