கல்லூத்து கிராமத்தில் ரூ.17 லட்சத்தில் அங்கன்வாடி கட்டிட பணியை யூனியன் சேர்மன் தொடங்கி வைத்தார்
தென்காசி,கல்லூத்து கிராமத்தில் ரூ.17 லட்சத்தில் அங்கன்வாடி கட்டிடப்பணியை யூனியன் சேர்மன் காவேரிசீனித்துரை தொடங்கி வைத்தார்.
கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், கழுநீர்குளம் ஊராட்சி, கல்லூத்து கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.17 லட்சம் மதிப்பீ;ட்டில் அங்கன்வாடி கட்டிடம் கட்டப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ஒன்றியக்குழு உறுப்பினர் மகேஸ்வரி சத்தியராஜ் தலைமை வகித்தார். கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் காவேரி சீனி;த்துரை கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் சரவணன், தென்காசி தெற்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாஸ்டர் கணேஷ், அரசு ஒப்பந்ததாரர் விஜயன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments