• Breaking News

    பெண் பக்தர் மீது அடிக்கப்பட்ட விபூதி..... ஆபாச நடனம் ஆடிய அர்ச்சகர்கள் சஸ்பெண்ட்.....

     


    விருதுநகர் மாவட்டம்ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரபலமான பெரிய மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் அர்ச்சகர்கள் 4 பேர் டிவியில் பாடல் போட்டு ஆபாச நடனம் ஆடிய சம்பவம் தற்போது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் அது குறித்த வீடியோவும் வைரலாகி வருகிறது. இந்த கோவில் வளாகத்தில்  பெண் பக்தர்கள் மீது அவர்கள் விபூதி அடித்தும் விளையாடினர்.

    இதனால் பெண் பக்தர்கள் கடும் அதிர்ச்சியில் இருக்கும் நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்நிலையில் தற்போது சம்பந்தப்பட்ட அச்சகர்கள் 3 பேரை சஸ்பெண்ட் செய்து இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த கோவில் பணியாளர் கார்த்திக் என்பவர் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மீதும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

    No comments