• Breaking News

    மாற்றுத்திறனாளி துறை சார்பில் எந்திரம் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனங்கள்..... கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் வழங்கினார்......


    திருவள்ளூர் மாவட்டம், கும்முடிப்பூண்டி தொகுதி, கவரைப்பேட்டை டி.ஜெ.லட்சுமி திருமண மண்டபத்தில் கும்முடிப்பூண்டி தொகுதியை சேர்ந்த 16 மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி துறை சார்பில் இயந்திரம் பொருத்ததப்பட்ட மூன்று சக்கர வாகனங்களை முன்னாள் மாவட்ட செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினரும், கும்முடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தராஜன் வழங்கினார். 

    கலந்து கொண்ட மாற்றுத்திறனாளி அனைவருக்கும் உணவுகளை வழங்கினார்.உடன் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் சீனிவாசன். இரா.அறிவழகன், கே.ஜி.நமச்சிவாயம், எம்.கேசவன். மு.பாஸ்கரன், எஸ்.உதயகுமார், அப்துல்கரீம், டி.ஜெ.ஜி.தமிழரசன், என்.எஸ்.மூர்த்தி, புருஷோத்தமன், எம்.அருள், பா.சுரேஷ், மோகனசுந்தர், கே.வி.நாகராஜ், எம்.முனிவேல், டி.மோகன், இ.எம்.ராஜேஷ், சண்முகம், அங்கமுத்து, கே.என்.பழனி, கே.வி.ரவி ஏ.பி.ஆனந்தராஜ், குப்பன், டார்லிங் ராஜா, பி.பார்த்தசாரதி, தமிழ்சாதிக் யுவராஜ் மேகா திலீப் ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.



    No comments