• Breaking News

    தென்காசி: ஓடைமறிச்சான் ஊராட்சியில் ரூ.1 கோடியே 34 லட்சத்தில் திட்டப்பணிகள்..... மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் தொடங்கி வைத்தார்......


    ஓடைமறிச்சான் ஊராட்சியில் ரூ.1 கோடியே 34 லட்சத்தில் திட்டப்பணிகளை மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் தொடங்கி வைத்தார்.

    ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம், ஓடைமறிச்சான் ஊராட்சி காத்தபுரத்தில் ரூ.34.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிட திறப்பு விழா, ரூ.99.90 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள உடையாம்புளி-கொள்ளங்குளம் சாலைப்பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் திவ்யா மணிகண்டன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் பொன்ராஜ், ஓன்றிய கவுன்சிலர் மீனா சந்தானம் முன்னிலை வகித்தனர்.

    தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தும், சாலைப்பணிக்கு அடிக்கல் நாட்டியும் பேசினார். இந்நிகழ்ச்சியில்  ஆலங்குளம் தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் சிவக்குமார், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் சண்முகராம், முன்னாள் ஊராட்சி தலைவர் சந்தனமுத்து, மக்கள் நல பணியாளர் பட்டு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    No comments