அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சமையல் கூடத்தை எம்எல்ஏ வெங்கடாசலம் திறந்து வைத்தார்
ஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்ற தொகுதி, அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 8.44இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட சமையல் கூடத்தினை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் ஏஜி.வெங்கடாசலம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
மேலும் பள்ளி மாணவர்களுக்கு மதியம் வழங்க தயார் செய்யப்பட்டிருந்த மதிய உணவினை சுவைத்து ருசி பார்த்து எம் எல் ஏ வெங்கடாசலம் ஆலோசனைகளை வழங்கினார்.மேலும் மதிய உணவு அருந்தும் மாணவர்களுக்கு மதிய உணவுகளை வழங்கி உணவின் தரம் சுவை குறித்து கேட்டறிந்தார்.
இந்த விழாவில் அந்தியூர் பேரூராட்சி மன்ற தலைவர் எம். பாண்டியம்மாள் , அந்தியூர் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் பழனிச்சாமி ,அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அர்த்தனாரி,அந்தியூர் ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் பாப்பாத்தி , அந்தியூர் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சேகர் , யாஸ்மின் தாஜ் , கவிதா , கீதா மற்றும் வார்டு செயலாளர் முத்து , ரவி , திமுக நிர்வாகிகள் பச்சமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments