பாமக பொதுச்செயலாளராக முரளி சங்கர் நியமனம்..... ராமதாஸ் அறிவிப்பு - MAKKAL NERAM

Breaking

Sunday, June 15, 2025

பாமக பொதுச்செயலாளராக முரளி சங்கர் நியமனம்..... ராமதாஸ் அறிவிப்பு

 


பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அன்புமணி ராமதாசுக்கு இடையே கடந்த சில வாரங்களாக கருத்து மோதல் நடந்து வருகிறது. இதுஒருபுறம் இருக்க டாக்டர் ராமதாஸ் கட்சியில் சரியாக செயல்படாதவர்களையும், டாக்டர் அன்புமணி ராமதாசின் ஆதரவாளர்களையும் கட்சியில் இருந்து நீக்கி புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்து வருகிறார். இதுவரை 60 மாவட்ட செயலாளர்கள், 39 மாவட்ட தலைவர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.



இந்த நிலையில் பாமக பொதுச்செயலாளராக முரளி சங்கரை நியமனம் செய்து டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பாமக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து வடிவேல் ராவணனை நீக்கி, முரளி சங்கர் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து புதிதாக நியமிக்கப்பட்ட பா.ம.க. வடக்கு மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்களுடன் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார்.

No comments:

Post a Comment