பெருங்களத்தூர் தெற்கு பகுதி திமுக சார்பில் கலைஞரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நான்காண்டு சாதனை விளக்கி மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா - MAKKAL NERAM

Breaking

Friday, June 13, 2025

பெருங்களத்தூர் தெற்கு பகுதி திமுக சார்பில் கலைஞரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நான்காண்டு சாதனை விளக்கி மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா


காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் தாம்பரம் மாநகர பெருங்களத்தூர் தெற்கு பகுதி திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 102வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்கி மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பெருங்களத்தூர் தெற்கு பகுதி செயலாளர் மாமன்ற உறுப்பினருமான எஸ்.சேகர் தலைமையில் பெருங்களத்தூர் தெற்கு பகுதி துணைச் செயலாளர் மாமன்ற உறுப்பினருமான பி.புகழேந்தி வரவேற்பில் நடைபெற்றது.

 இதில் சிறப்பு அழைப்பாளராக தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, தலைமை கழக நட்சத்திர பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமார் கமலக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு நான்காண்டு சாதனைகளை விளக்கி சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் நான்காவது மண்டல குழு தலைவர் டி.காமராஜ், வ.க.ரவிச்சந்திரன், பகுதி பிரதிநிதி ஜெபதுரை, சிவக்குமார், வட்டக் கழகச் செயலாளர் எஸ்.ஐசக், கே.வெங்கடேசன், கே.கோட்டி, ஆர் பரஞ்ஜோதி, ஆர்.ரோமன், தெற்கு பகுதி இளைஞரணி அமைப்பாளர் ஆர்.ஓம்பிரகாஷ் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள் ஒன்றிய கழக நிர்வாகிகள் பகுதி கழக நிர்வாகிகள் வட்டக் கழக செயலாளர்கள் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இறுதியில் பகுதி பொருளாளர் ஜே.மணிவண்ணன், மாநகரப் பிரதிநிதி கே.சுந்தர் ஆகியோர் நன்றியுரை ஆற்றினார்.

No comments:

Post a Comment