சிட்லபாக்கம் பகுதியில் தவெக சார்பில் ஊனமுற்றோர், செவி, திறன் குறைபாடு உள்ள குழந்தைகள் காப்பகத்தில் நலத்திட்ட வழங்கும் விழா நடைபெற்றது
செங்கல்பட்டு வடமேற்கு மாவட்டம் சிட்லபாக்கம் பகுதி சார்பில் தளபதி விஜய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சிட்லபாக்கம் பகுதி தலைமை நிர்வாகிகள் ஏற்பாட்டில் தாம்பரம் சானிட்டோரியத்தில் உள்ள ஊனமுற்றோர், செவி, திறன் குறைப்பாடு உள்ள குழந்தைகள் காப்பகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது .
இதில் செங்கல்பட்டு வட மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் டி.சரத்குமார் கலந்துகொண்டு 5 சிசிடிவி கேமராக்கள், தண்ணீர் சுத்தகரிப்பு இயந்திரம், ஆதரவற்ற குழந்தைகளுக்கு போர்வை மற்றும் தேவையான பொருட்கள், 150 குழந்தைகளுக்கு மதிய உணவு பிரியாணி, நோட்டு புத்தகம் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்கள்.
இதில் பகுதி இளைஞரணி, மகளிரணி, தொண்டரணி, மாணவர் அணி, தொழிநுட்ப அணி நிர்வாகிகள் 34வது, 43வது மற்றும் 44வது வார்டு நிர்வாகிகள் அனைவரும் கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
No comments