பொடியனூர் சிவசக்தி வித்யாலயா பள்ளியில் சர்வ தேச யோகா தினம், இசை தின விழா கொண்டாட்டம்
ஆவுடையானூர்-பொடியனூர் சிவசக்தி வித்யாலயா சீனியர் செகண்டரி சிபிஎஸ்இ பள்ளியின் ஏரொபிக் கிளப் சார்பில் சர்வ தேச யோகா தினம் மற்றும் உலக இசை தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் நித்யா தினகரன் தலைமை வகித்தார். துணை முதல்வர் ரோஸ்லின் சிங் முன்னிலை வகித்தனர். 9ம் வகுப்பு மாணவன் ராகுல் வரவேற்றார்.
தென்காசி மாவட்ட பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் ராஜ யோகா பயிற்சியாளர்கள் தண்டபானி, காளி, மாலதி, முப்புடாதி ஆகியோர்கள் பங்கேற்று, ராஜ யோகா பயிற்சியின் முக்கியத்துவத்தையும் அதை செய்வதற்கான வழிமுறைகளையும் எடுத்துக்கூறினர். பிரம்ம குமாரிகளின் சிறப்பு இயல்புகளை பற்றி மாணவி லெட்சுமி சுகிதா பேசினார். மாணவி சுதர்ஷினி மற்றும் சத்யபாமா யோகாவின் வரலாறு மற்றும் யோகாவின் நன்மைகளை குறித்து பேசினர்.
தொடர்ந்து உலக இசை தினத்தையும் கொண்டாடும் விதமாக மாணவர்கள் யோகாவின் பலன்களை இசை வடிவில் பாடியும் நடனாடினர். மாணவன் ஈதன் எரிக், மாணவி கோசல்ஸ்ரீ இசையின் முக்கியத்துவத்தை குறித்து பேசினர். மாணவி மதுமிதா, ஹரினி அருணா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். மாணவி விவேகா நன்றி கூறினார்.
No comments