• Breaking News

    கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு ஆரணி பேரூர் கழகம் மற்றும் மாவட்ட பொறியாளர் அணி சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது


    திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், ஆரணி பேரூர் கழக திமுக மற்றும் மாவட்ட பொறியாளர் அணி சார்பில் கலைஞரின் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு  செம்மொழி நாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆரணி பஜார் வீதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ் தாங்கினார். முன்னதாக ஆராணி பேரூர் கழக செயலாளர் பி.முத்து,மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் எஸ்.ரோஸ் பொன்னையன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.

    மாவட்ட அவைத் தலைவர் மு.பகலவன்,தலைமை செயற்குழு உறுப்பினர் பி.ஜெ.மூர்த்தி,மாவட்டத் துணைச் செயலாளர்கள் உமாமகேஸ்வரி,கதிரவன், பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன்,சோழவரம் வடக்கு ஒன்றிய செயலாளர் நா.செல்வசேகரன்,மேற்கு ஒன்றிய செயலாளர் வி.ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர் சைதை சாதிக் கலந்துகொண்டு திமுக அரசின் நான்காண்டு சாதனை குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைத்தார். இதன் பின்னர் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் வழங்கி சிறப்புரையாற்றினார். 

    இந்நிகழ்ச்சியில் பேரூர் அவைத் தலைவர் ரமேஷ்,முன்னாள் செயலாளர் ஜி.பி.வெங்கடேசன், பொருளாளர் கு.கரிகாலன், நிர்வாகிகள் நிலவழகன்,கலையரசி, ஜெயக்குமார்,ரகுமான்கான்,தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் சந்தோஷ் பிரபா,மற்றும் மாவட்ட, ஒன்றிய,நகர,கிளைக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.முடிவில் வார்டு செயலாளர்கள் மகேந்திரன், பாலகுருவப்பா,நீலகண்டன்,பாலாஜி ஆகியோர் நன்றி கூறினர்.

    No comments