ஈரோடு மாவட்டம் ,நம்பியூர் கிழக்கு ஒன்றிய திமுக செயற்குழு மற்றும் வாக்குச்சாவடி நிலை முகவர்கள்( BLA -2 ) கூட்டம் நம்பியூர் கிழக்கு ஒன்றிய அவைத் தலைவர் எம்.பி.பெரியசாமி தலைமையில்,நம்பியூர் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளரும் , நம்பியூர் பேரூராட்சி மன்ற தலைவர் மெடிக்கல்.ப.செந்தில்குமார் முன்னிலையில்,நம்பியூர் சிவசக்தி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் வாக்குச்சாவடி வாரியாக வழங்கியும்,2026 - சட்டமன்றத் தேர்தலில் களப்பணி குறித்து ஆலோசிக்கப்பட்டது. மற்றும் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.
நிகழ்வின் போது தலைமை பொது குழு உறுப்பினர் கீதா முரளி , மாவட்ட நெசவாளர் அணி தலைவர் என்.சி.சண்முகம் , மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் S.S (எ) சண்முகசுந்தரம் , மாவட்ட பிரதிநிதி பி.வி.இளங்கோ , மாவட்ட துணை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர்கள் ஜே.வி முருகசாமி , பங்க் ரமேஷ் செல்வன் , ஒன்றிய கழக துணைச் செயலாளர் வேலுச்சாமி மற்றும் BLA-2, BLC, மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளைக் கழக, வார்டு கழக, உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக மூத்த முன்னோடிகள், கழக உடன்பிறப்புகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments:
Post a Comment