நாகை அருகே நூற்றாண்டு கண்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நூற்றாண்டு நினைவு சிறார் நூலகம் திறப்பு
முன்னாள் மாணவி வளர்மதி விஜய் ஆனந்த் (சிங்கப்பூர்) நன்கொடைகள் வழங்கி நூலகத்தை திறந்து வைத்தார்கள்.குழந்தைகள் வாசித்து பயன்பெறும் வகையில் முதற்கட்டமாக ரூ 25,000 மதிப்பிற்கு 500 சிறார் புத்தகங்களை பள்ளி நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்கள்.பள்ளி வளர்ச்சிக்கான பொருட்களை ரூ 6 இலட்சம் மதிப்பில் முன்பு பள்ளிக்கு வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.பள்ளிக்கல்வித்துறை வழங்கிய வாசிப்பு இயக்க நூல்களும் பள்ளிக் குழந்தைகள் வாசித்து பயன்பெற புதிய நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் கோ.மஞ்சு தலைமை வகிக்க,கல்வி செயல்பாட்டாளர் ப.ஜெயக்குமார்,கீழ்வேளூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் S.நித்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் மா.மகாலெட்சுமி அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.மாவட்ட ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் முனைவர் கி.அன்புமுத்து ,துணை முதல்வர் முனைவர் கோ.காமராசன் அவர்களும்,கீழ்வேளூர் வட்டாரக் கல்வி அலுவலர்கள் திரு வ.சுப்ரமணியன்,இரா.அன்பழகன் ஆகியோர் நன்கொடைகள் வழங்கியவர்களுக்கு பரிசளித்து பாராட்டி பேசினர்.பள்ளி நூலகம் பயன்பாடு குறித்து பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளிடையே திரு விஜய் ஆனந்த் அவர்கள் சிறப்புரையாற்றினார்.இறுதியாக பள்ளி ஆசிரியர் கு.வ.மனத்துணைநாதன் நன்றியுரையாற்றினார்.
நிகழ்வை பள்ளி ஆசிரியர்கள் கோ.லெட்சுமி,வை.மல்லிகா,பெ.சித்ரா,கா.சுதா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
கீழ்வேளூர் தாலுகா நிருபர் த.கண்ணன்
No comments