கீழப்பாவூரில் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை பயிற்சி கூட்டம்..... மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் பங்கேற்பு.....
கீழப்பாவூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை தொடர்பான பயிற்சி கூட்டம் கீழப்பாவூரில் நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பொன்.அறிவழகன், நெசவாளர் அணி அமைப்பாளர் ராஜாமணி, ஆலடி எழில்வாணன், முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் தங்கசாமி முன்னிலை வகித்தனர். ஒன்றிய பொறுப்பாளர் சீ.பொன்செல்வன் வரவேற்று பேசினார்.
மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் மற்றும் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் கணேஷ்குமார் ஆதித்தன் ஆகியோர் கலந்து கொண்டு, டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உறுப்பினர் சேர்க்கை தொடர்பாகவும், இல்லங்களை தேடி சென்று பாக முகவர்கள், பாக டிஜிட்டல் முகவர்கள் செயல்படும் விதம், உறுப்பினர் சேர்க்கையை அதிகரிப்பது குறித்து விளக்கி பேசினர். தொடர்ந்து தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் நரேஸ்குமார் பயிற்சி அளித்தார்.
இக்கூட்டத்தில் பெத்தநாடார்பட்டி, பூலாங்குளம், நாகல்குளம் மற்றும் கீழப்பாவூர் பேரூர் பகுதிகளை சேர்ந்த கிளைச்செயலாளர்கள், வார்டு செயலாளர்கள், பாகமுகவர்கள், பாக தகவல் தொழில்நுட்ப அணி முகவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கீழப்பாவூர் பேரூர்; செயலாளர் ஜெகதீசன் நன்றி கூறினார்.
No comments