• Breaking News

    காந்தி உலக மையம், தி சென்னை சில்க்ஸ் இணைந்து நடத்திய பாரம்பரிய விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது


    காந்தி உலக மையம் தி சென்னை  சில்க்ஸ் இணைந்து ஜுன் 28, 29-ம் தேதிகளில் கும்மிடிப்பூண்டி எளாவூர்,விவே கானந்தா மெட்ரிக் பள்ளியில் நம் பாரம்பரிய விளையாட்டுகளான சிலம்பம்,யோகா, கர்லாகட்டை, மல்லர் கம்பம் போன்ற விளையாட்டு போட்டிகள் வயது வாரியாக மாநில அளவில் நடைபெற்றது.ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற முதல் மூன்று இடங்களுக்கு வெற்றிக்கேடயமும் பங்கு பெற்ற அனைவருக்கும் சான்றிதழும் வழங்கப்பட்டது.நிகழ்வின் முக்கிய நிகழ்வாக   ஆண் பெண் இருப்பாளர்கள் என 100 பேர் மானவ மானவிகள் கயிற்றில் தொங்கி யோக செய்யும் மல்லர் கம்பம் நிகழ்வு அரங்கேற்றப்பட்டது.

    இது ஒர் அபூர்வ சாதனை விளையாட்டாக பேசப்படும்; போற்றப்படும் நிகழ்வாக பார்வையாளர்களால் போற்றப்பட்டது.     மேலும் விளையாட்டு வீரர்களுக்கும் பெற்றோர்களுக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பதைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பங்கேற்பாளர்-பார்வையாளர்கள் அனைவரையும் போட்டி நடைபெறும் மைதானம் தங்குமிடங்களில் பாலீதீன் ப்ளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க முன்னரே காந்தி உலக மையம் சார்பாக அறிவித்து இருந்தனர். மேலும் வளாகத்திற்குள் குப்பை சேராமல் பாதுகாக்கும் 'சுத்த விரும்பி'களுக்கு அவர்களின் செயல்களை, சமுக அக்கறையை ஊக்குவிக்கும் வகையில் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. 


     விளையாட்டுக்களை மீட்க இரண்டாவது முறையாக காந்தி உலக   மையம்  நடத்தியது. ஏற்கனவே 'மண்ணும் மரபும்' மறை(று)க்கப்பட்ட பாரம்பரியத்தை மீட்கும் பணியில் இணைந்து பயணித்தது குறுப்பிடத்தக்கதாகும்.காந்தி உலக மையம் நிறுவனர் எம்.எல்.ராஜேஷ் ஏற்பாடு செய்து வரவேற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு பாண்டிச்சேரி வருமானவரித்துறை அலுவலர் மருதுபாண்டி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு   சாதனையாளர்கள்  வேர்ல்டு புக் ஆப் ஆட்சி ஒர்க்ஸ் மற்றும் இந்தியன் புக் ஆப் அச்சிவர்ஸ் ஆகிய இரண்டு புத்தகங்களிலும் இடம் பெற்ற விருதுகளையும் சான்றிதழ்களையும் கேடயங்களையும் வழங்கினார். 

    இதில் ஓவரால் சாம்பியன்ஷிப் அப்புறம் மாவட்டத்தையும் இரண்டாம் இடம் தர்மபுரி மூன்றாம் இடம் வேலூர் மாவட்டமும் பெற்றது.திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம்,மருத்துவர் இசாமுதீன் பாப்பா,எழுத்தாளர் ஜான் தன்ராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களா கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார். விழா முடிவில் காந்தி உலகமைய நிர்வாக இயக்குனர் விஜயலட்சுமி, பள்ளி முதல்வர் மோகன்ராஜ் ஆகியோர் நன்றி கூறினர்.

    No comments