• Breaking News

    நாலுவேதபதி சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக நடைபெற்றது..... 108 சங்கு புனித நீரால் அபிஷேகம்.....

     


    நாகபட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் நாலுவேதபதி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஆனந்த வள்ளி அமராதீஸ்வரர் ஆலயமானது பழைமை வாய்ந்த சிவ தலமாகும் இங்கு வீற்றிருக்கும் சிவன் சுயம்பு லிங்கமாக எழுந்தருளி உள்ளதாகவும் இன்றுவரை லிங்கம் வளர்ந்து கொண்டே வருவதும் இக்கோவிலின் சிறப்பு எனக் கூறப்படுகிறது .

     இக்கோவிலில்  நந்திகேஸ்வருக்கு மாதந் தோரும் பிரதோஷ வழிபாடு மிக சிறப்பாக நடைபெற்று வருவது வழக்கம். இந்நிலையில்   பிரதோஷத்தை முன்னிட்டு நாலுவேதபதி சேர்ந்த விஜய் மகேஸ்வரி ஆசிரியை தலைமையில் 108 சங்கு புதியதாக வாங்கி கொடுத்து ஆனந்த் சிவச்சாரியர். மந்திரங்கள் முழங்க யாகம் வளர்த்து. சங்கு புனித நீரை கோவிலை சுற்றி வலம்  வந்து. சுவாமிக்கும் நந்தி பெருமானுக்கும் அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    செய்தியாளர் ஜி.சக்கரவர்த்தி



    No comments