• Breaking News

    கும்மிடிப்பூண்டி: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

     


    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்தி குப்பம் பகுதியில் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டின் எல்லை ஓரங்களில் அமைந்துள்ள போக்குவரத்து துறையின் 22 சோதனைச் சாவடிகளை அகற்றிட வேண்டும், ஓட்டுனர் உரிமம் வாகன சான்றிதழ் உள்ளிட்டவற்றை அஞ்சல் முறையில் அனுப்பும் திட்டத்தை கைவிட்டு பழைய முறைப்படி நேரடியாகவே வழங்கிட வேண்டும், 

    வாகனங்களில் ஒளிரும் பட்டை ஒட்டுவதை முறைப்படுத்திட வேண்டும், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும், காவல்துறையினரால் ஆன்லைன் அபராதம் வசூலிக்கும் முறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் முழக்கங்களை எழுப்பி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

    தமிழ்நாடு அரசு தங்களது கோரிக்கைகளை கனிவோடு கவனத்தில் ஏற்று நிறைவேற்றிட வேண்டும் என லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ராஜசேகர் தெரிவித்தார். இதில் ஆந்திரா மாநிலம் சேர்ந்த லாரி உரிமையாளர் கலந்து கொண்டனர்.



    No comments