பொடியனூர் சிவசக்தி வித்யாலயா பள்ளியில் உலக புலிகள் தினம் கொண்டாட்டம்
பொடியனூர் சிவசக்தி வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் உலக புலிகள் தினம் எக்கோ கிளப் சார்பில் கொண்டாடப்பட்டது. மாணவர்கள் தங்கள் தனித்திறனை வெளிப்படுத்தும் விதமாக கவிதைப் போட்டி மற்றும் ஓவியப்போட்டிகளில் பங்குபெற்றனர். மேலும் புலிகள் பற்றி 9ம் வகுப்பு மாணவி ஜெனிஷா ராணி பேசினார்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எகோகிளப் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியை ஒன்பதாம் வகுப்பு மாணவன் மணிகண்டன் தொகுத்து வழங்கினார். விழா ஏற்பாட்டினை பள்ளி முதல்வர் நித்தியா தினகரன் , துணை முதல்வர் ரோஸ்லின் தலைமையில் ஆசிரியை மாரிசெல்வி மற்றும் மாணவர்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.
No comments