தென்காசி மாவட்ட காவல்துறையின் வாகனங்கள் பொது ஏலம் 14ந்தேதி நடக்கிறது
தென்காசி மாவட்ட காவல்துறையில் கழிவு செய்யப்பட்ட அரசு வாகனங்கள் வரும் 14ந்தேதி காலை 10 மணிக்கு குற்றாலம் ஆயுதப்படை வளாகத்தில் பொது ஏலம் விடப்படுகிறது. இந்த ஏலத்தில் 3 இருசக்கர வாகனங்களும், 8 நான்கு சக்கர வாகனமும் ஏலம் விடப்படுகின்றன.
வாகனங்களை நாளை 11ந்தேதி முதல் 13ந்தேதி வரை காலை 9 முதல் மாலை 5 மணிவரை நேரில் வந்து பார்வையிடலாம், இதில் ஏலம் எடுக்க விரும்பும் நபர்கள் இருசக்கர வாகனத்திற்கு ரூ.1,000, நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.5,000 முன்பணம் கட்டி டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும், டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும். ஏலம் தொடர்பான சந்தேகங்களுக்கு 8248799630 ரூ 9600816083 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் அன்றைய தினமே ஏலத் தொகையுடன் ஜி.எஸ்.டி தொகையையும் ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.
No comments