• Breaking News

    அழகுமுத்துக்கோன் 268 வது குருபூஜை விழாவை முன்னிட்டு அழகு முத்துக்கோன் பேரவை மற்றும் யாதவ சமுதாய மக்கள் நடத்திய மாட்டு வண்டி எல்கை பந்தயம்


    புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் -லில் அழகு முத்துக்கோன் பேரவை மற்றும் யாதவ சமுதாய மக்களால் நடத்தப்படும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.இந்த போட்டியை அழகுமுத்துக்கோன் பேரவை தலைவர் KP.வேல்ராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். 

    இந்த போட்டியில் மதுரை, திருச்சி,தஞ்சாவூர்,புதுக்கோட்டை இராமநாதபுரம் சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மாடுகள் போட்டியில் கலந்து கொண்டன.

     இதில் பெரிய மாடு சின்ன மாடு என இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது.இதில் 50,க்கும் மேற்பட்ட மாடுகள் போட்டியில் கலந்து கொண்டன.இரட்டை மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு நிர்ணயிக்கப்பட்ட பந்தைய இலக்கினை நோக்கி ஒன்றையொன்று முந்திச் சென்றன.

    போட்டியில் வெற்றி பெற்ற ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாட்டின் உரிமையாளர்களுக்கு 2லட்சத்தி 47ஆயிரம் ரொக்கப்பரிசும் கோப்கைகளும் சிறப்பு பரிசாக எல் இ டி டிவியும் வழங்கப்பட்டது.பந்தைய நிகழ்ச்சியை காண சாலையின் இரு புறமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கண்டு ரசித்தனர்.மீமிசல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    No comments