• Breaking News

    இளம்பெண் மீது காதல்.....17 வயது சிறுவன் செய்த கொடூர செயல்.....

     


    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் ஒரகடத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் மூலம் சைலஜா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்களது திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். விரைவில் திருமணம் நடக்க உள்ளது.

    கடந்த வாரம் கருப்பசாமியும் சைலஜாவும் இணைந்து ரிலீஸ் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோவை சைலஜாவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் 17 வயது சிறுவன் பார்த்துள்ளார். ஏற்கனவே 17 வயது சிறுவன் சைலஜாவை காதலித்து வந்துள்ளார்.

    தனது காதலை பலமுறை அவரிடம் கூறும் போது சைலஜா சிறுவன் விளையாட்டுத்தனமாக கூறுவதாக முதலில் நினைத்துள்ளார். அதன் பிறகு சிறுவனுக்கு அறிவுரை கூறி காதலை ஏற்க மறுத்துள்ளார். கருப்பசாமியுடன் இணைந்து சைலஜா எடுத்த ரீல்ஸ் வீடியோவை பார்த்த சிறுவன் கோபத்தில் அவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு திட்டியுள்ளார்.

    இது குறித்து சைலஜா கருப்புசாமியிடம் கூறியுள்ளார். உடனே கருப்பசாமி சிறுவனை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நாங்கள் காதலிக்கிறோம். திருமணம் செய்து கொள்ளப் போகிறோம். இனி தொந்தரவு செய்யாதே என கூறியதால் சிறுவன் உங்களை நேரில் பார்க்க வேண்டும். நாம் பேசிக் கொள்ளலாம் என அழைத்ததாக தெரிகிறது.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை கருப்பசாமி அப்பகுதியில் உள்ள டீக்கடைக்கு சிறுவனை பார்க்க சென்றுள்ளார். அப்போது ஆறு பேருடன் வந்த சிறுவன் பீர் பாட்டிலால் கருப்பசாமியின் தலையில் அடித்து, அவரை காட்டுப்பகுதிக்கு கடத்தி சென்று அடித்து உதைத்துள்ளார். சைலஜாவை நான் தான் திருமணம் செய்வேன். குறுக்கே நீ ஏன் வந்தாய் என கூறிய கருப்பசாமியை சிறுவன் தாக்கியுள்ளார்.

    அந்த வழியாக சென்று கொண்டிருந்த சிலர் கருப்பசாமியை மீட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே ஆறு பேரும் அங்கிருந்து தம்பி சென்றனர். தற்போது தனியார் மருத்துவமனையில் கருப்பசாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் 17 வயது சிறுவன் உள்பட ஆறு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    No comments