மதுரையில் ஆகஸ்ட் 25-ல் 2-வது மாநில மாநாடு..... தவெக தலைவர் விஜய் அறிவிப்பு.....
தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டினை பிரம்மாண்டமாக நடத்தினார். இந்த மாநாட்டில் சுமார் 8 லட்சம் பேர் கலந்து கொண்ட நிலையில் அதன் பிறகு சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் மாவட்ட செயலாளர்கள் கூட்டங்கள் என நடைபெற்று வருகிறது.
அடுத்து வரும் தேர்தலை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் விஜய் களம் காண இருக்கும் நிலையில் முதல்வர் வேட்பாளராக விஜய் அறிவிக்கப்பட்டுள்ளார். அதோடு கூட்டணிக்காக வரும் கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என நடிகர் விஜய் அறிவித்துள்ளார். இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெற இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அதனை நடிகர் விஜய் உறுதிப்படுத்தியுள்ளார்.
இன்று காலை பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் மதுரையில் மாநாடு நடைபெறும் இடத்தில் பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது. இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் தன்னுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வருகிற ஆகஸ்ட் 25ஆம் தேதி மதுரையில் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் வாகை சூடும் வரலாறு திரும்பும் வெற்றி நிச்சயம் என்றும் பதிவிட்டுள்ளார்.
No comments