கோவை குண்டுவெடிப்பு சம்பவம்..... 27 வருடங்களுக்கு பிறகு முக்கிய குற்றவாளி டெய்லர் ராஜா கைது.....
தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்த சாதிக் என்ற டெய்லர் ராஜா தலைமறைவாக இருந்த நிலையில் போலீசார் அவரை தேடி வந்தனர்.இந்நிலையில் 27 வருடங்களுக்கு பிறகு தற்போது டெய்லர் ராஜாவை போலீசார் சத்தீஸ்கரில் வைத்து கைது செய்துள்ளனர். அவரை தீவிரவாத தடுப்பு பிரிவினர் கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 27 வருடங்களுக்கு பிறகு முக்கிய குண்டு வெடிப்பு குற்றவாளி சிக்கிய சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.
No comments