ரூ.3 லட்சம் லஞ்சம்..... இந்து சமய அறநிலையத்துறை பெண் அதிகாரி கைது.....
கோயம்புத்தூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இந்திரா. இவர் தனியார் கோவில் வருவாய் பிரச்சினை தொடர்பாக நடவடிக்கை எடுக்க 3 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் முதல் கட்டமாக ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாக சிக்கினார். இதைத்தொடர்ந்து இந்திராவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் இந்திராவிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் வைத்து தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments