• Breaking News

    குடும்ப தகராறு..... ஒரே சேலையில் தூக்குப்போட்டு தம்பதி தற்கொலை..... 3 குழந்தைகள் அனாதையாக நிற்கும் சோகம்.....

     


    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள நயினார்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 35). இவருடைய மனைவி ரேவதி (32). இவர்களுக்கு ஜனனி (11) என்ற மகளும், வருண் பகவான் (9), வெற்றிவேல் (7) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். ஆறுமுகம் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    அடிக்கடி கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மகன்கள், மகள் பள்ளிக்கு சென்று இருந்தனர். அப்போது, உறவினர்கள் சிலர் வீட்டுக்கு வந்தனர். வீடு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது ஒரு அறையில் ஒரே சேலையில் ஆறுமுகமும், ரேவதியும் தூக்கில் தொங்கினர்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் இருவரையும் கீழே இறக்கினர். அப்போது ரேவதி இறந்து விட்டது தெரியவந்தது. ஆறுமுகத்தை உடனே திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து அறிந்த திருப்புவனம் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், குடும்பதகராறில் கணவன், மனைவி தூக்குப்போட்டு தற்கொலை கொண்டது தெரியவந்தது.

    தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை கொண்டநிலையில், அவர்களது 3 குழந்தைகள் அனாதையாக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    No comments