புதைக்க,எரிக்க இடமில்லை.! கலெக்டரிடம் மனு கொடுத்தும் பயனில்லை.!! தலைஞாயிறு மக்களின் மனநிலை.!!!
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் தாலுகாவுக்கு உட்பட்ட தலைஞாயிறு பேரூராட்சியில் சடலங்களை எரிப்பதற்கு போதிய வசதி மற்றும் கட்டிடங்கள் இல்லாததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தலைஞாயிறு பகுதியில் மூன்று மற்றும் நான்காவது வார்டுகளுக்கு உட்பட்ட மயான கூடம் ஒன்று உள்ளது. இந்த மயான கூடம் ஆனது 1995 மற்றும் 96 ஆண்டுகளில் கட்டப்பட்டுள்ளது. தற்சமயம் மிகவும் பழுதடைந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிந்து பலகீனமாக உள்ளதால் சடலங்களை புதைக்க மற்றும் எரிப்பதற்கு போதிய வசதி இல்லை.
மேலும் மழைக்காலங்களில் அருகில் அமைந்துள்ள அரிச்சந்திரா நதி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் சமயத்தில் மயான கூடம் முழுவதும் தண்ணீரில் மூழ்கி விடும் அவல நிலை இந்த தலைஞாயிறு சிறப்பு பேரூராட்சியில் நடந்து வருகிறது. பலமுறை மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்தும் எந்த பயனில்லை எனவே புதிதாக மயான கூடம் அமைத்து தருமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்:ஜி. சக்கரவர்த்தி
No comments