பொன்னேரி: செலியம்பேடு கள்ளூர் பூங்குளம் அடங்கிய ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் பள்ளிபாளையம் புயல் பாதுகாப்பு மைய கட்டிடத்தில் நடைபெற்றது. இதில் சேலியம்பேடு,கள்ளூர்,பூங்குளம் ஊராட்சிகளுக்கு உட்பட்ட பொதுமக்கள் தங்கள் பிரச்சனைகள் குறித்து மனு அளித்து உடனடி தீர்வு காணும் விதத்தில் முகாமில் பங்கேற்றனர். முகாமினை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் துவக்கி வைத்தார்.
இதில் மாற்று திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளும் குறிப்பாக ஒரு பெண்ணுக்கு காது கேட்கும் கருவியும் வழங்கப்பட்டது. கூட்டத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் நிறைவுறையாற்றி கலந்து கொண்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி,குணசேகரன்,திமுக மீஞ்சூர் வடக்கு ஒன்றிய செயலாளர் முரளிதரன்,ஆரணி அன்புவானன், மாதர்பாக்கம் குணசேகரன் அத்திப்பட்டு கதிர்வேல்.பழவை ஜெயசீலன்,ஊராட்சி மன்ற செயலர்கள்,பொன்னேரி வட்டாட்சியர் அலுவலக அலுவலர்கள் இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் அளித்தனர்.
No comments