ஏர் இந்தியாவுக்கு என்ன தான் ஆச்சு..? டெல்லியில் ஏர் இந்தியா விமானத்தில் திடீர் தீ.....
அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் 260 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இன்னும் அதன் தாக்கமே இந்தியாவில் அடங்கவில்லை. சமீப காலமாக ஏர் இந்தியா விமானங்களில் பல பிரச்சினைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தற்போது ஏர் இந்தியா விமான விபத்தில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
அதாவது ஹாங்காங்கில் இருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமான விபத்தில் திடீரென புகை கிளம்பியது. அந்த விமானம் தரையிறங்கும் போது திடீரென தீப்பிடித்த நிலையில் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை. மேலும் இந்த விபத்து குறித்து யார் இந்தியா விசாரணை நடத்தி வருகிறது.
No comments