• Breaking News

    வினா ஸ்ரீ யோகா மையம் நடத்திய தென்னிந்திய அளவிலான யோகாசனம் போட்டி சுமார் 4 மாநிலங்கள் சேர்ந்த 800 மாணவ மாணவிகள் பங்கேற்பு


    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஏளாவூர் தனியார் பள்ளியில்.வினா ஸ்ரீ  யோக மையம் நடத்தும்   தென்னிந்திய அளவிலான யோகாசன போட்டி 2025  இந்த போட்டியில் சுமார் 4 மாநிலங்கள் கலந்து கொண்டன 800 க்கும் மேற்பட்ட  மாணவ,  மாணவிகள் பங்கேற்றனர். 

    இதை கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் விஜயகுமார் மற்றும் திரைப்பட இயக்குனர் ரமேஷ் சுப்பிரமணியம்  அவர்கள் மற்றும் சகுந்தலா அம்மாள் பள்ளி தாளாளர் வெங்கடேசன் அவர்கள்  லயன்ஸ்  முத்து அவர்கள் மற்றும் தொழிலதிபர் சுகுமாரன் மற்றும் முன்னாள் கவுன்சிலர் வி எம் சீனிவாசன்  அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி  பரிசளித்தார்கள்  . இதில் ஆண்கள் பிரிவில் சேம்பியன் ஆப் சேம்பியன் பட்டம்  எம் ஹரிஷ் மற்றும் சீத்தேஷ் வெற்றி பெற்றனர் இரண்டாம் இடத்தை  யோஜித், நீலேஷ்  மற்றும் எம் தர்ஷன் மூன்றாம் இடம் பிடித்தார்கள் பெண்கள் பிரிவில்   ஜெய ஸ்ரீதனா, முதலிடம் பூஜாஸ்ரீ, ரெஜினா இரண்டாம் இடம் ராகவி மதுலிகா, மற்றும் அக்ஷயா ஸ்ரீ ஆகியோர் வெற்றி பெற்றனர்  மற்றும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் அம்பத்தூரை சேர்ந்த ருத்ரப்பா மெட்ரிகுலேஷன் பள்ளி தட்டிச் சென்றது.

     போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு    சிறப்பு விருந்தினர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ் விஜயகுமார் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்தார்  அதேபோல் மாணவ மாணவிகளின் வெற்றிக்கு  ஊன்று கோளாக விளங்கிய  சாதனையாளர் விருது பெற்ற ஆசிரியர்  காளத்தீஸ்வரன் மற்றும் பயிற்சி ஆசிரியர்கள் அர்ச்சனா,வித்யா ஆகியோருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.



    No comments