• Breaking News

    பஞ்சாப்: ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் பற்றாக்குறை.... 3 நோயாளிகள் பலி

     


    பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள சிவில் ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறையால் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த 3 நோயாளிகள் பரிதாமாக உயிரிழந்தனர். நேற்று இரவு 8 மணி அளவில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து ஆஸ்பத்திரிக்கு வந்த சுகாதாரத் துறை அமைச்சர் பல்பீர் சிங் விசாரணை நடத்தினார்.

    ஆக்சிஜன் சப்ளையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆக்சிஜன் சப்ளை 5 நிமிடம் தடைபட்டதாகவும், தொழில் நுட்பகோளாறு 10 நிமிடத்தில் சரி செய்யப்பட்டதாகவும் தலைமை டாக்டர் தெரிவித்தார். இறந்த 3 பேரின் உடல்நிலை மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்ததால் அவர்கள் உயிரிழந்ததாக டாக்டர் தெரிவித்தார்.

    இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு 48 மணி நேரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் பல்பீர் சிங் தெரிவித்தார்.

    No comments