திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தில் அடங்கிய மகிலா காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு பொறுப்புச் சான்றிதழ் வழங்கும் விழா
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தில் அடங்கிய மகிலா காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு பொறுப்புச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர்மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர் அசினாசையத் தலைமை வகித்தார்.
திருவள்ளூர் பாராளுமன்ற அமைப்பாளரும் முன்னாள் மாவட்ட தலைவருமான வழக்கறிஞர் ஏ.ஜி.சிதம்பரம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தில் அடங்கிய மகிலா காங்கிரஸ் புதிய நிர்வாகிகளான திருவள்ளூர் வடக்கு மாவட்டம் மகளிர் காங்கிரஸ் தலைவியாக ஜோதிசுதாகர் உள்ளிட்ட 13 நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி பொறுப்புச் சான்றிதழினை வழங்கினர்.
இதில் வட்டார தலைவர் டி.என்.பாபு ,பிரேம்குமார், போட்டோ செல்வம், ஆட்டோ சிவா, மாவட்ட துணை தலைவர் ராஜன், பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன், ராமஜீவன்,குப்பன், ராஜேந்திரன்,மகளிரணி நிர்வாகிகள் மலர். ஜெயசீலி, லலிதா,கார்த்திகா சத்யா ,கோமதி, ஹரிதாஸ்.கோமதி, வேலு,சாந்தி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர், இறுதியில் சமூக ஊடகப்பிரிவு பொறுப்பா கௌசல்யா தேவராஜ் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
No comments