• Breaking News

    திருக்குவளையில் காவல் நிலையம் செயல்பாடுகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது


    நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் திருக்குவளை தாலுகா அஞ்சுகம் முத்துவேலர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 12 ஆம் வகுப்பு  மாணவ மாணவிகளுக்கு காவல் நிலையம் குறித்த அடிப்படை புரிதலையும், மாணவ மாணவிகளுக்கு  சந்திக்கும் சமூக பிரச்சனைகள் குறித்தும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், அன்றாட காவல் நிலைய அலுவல்கள், காவலர்களின் செயல்பாடுகள், அவசரகால அழைப்பு எண்கள் போன்ற பல்வேறு தலைப்புகளில் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியும் எளிதில் மாணவ மாணவிகள் எந்த ஒரு அச்சமும் இன்றி காவல்துறையை அணுகும் விதமாக காவல்துறையினர் மற்றும் மாணவ மாணவிகளுக்கு இடையே கலந்துரையாடல் ஏற்பாடு செய்தும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து அவர்களின் சந்தேகங்களை தீர்த்து பள்ளி மாணவ மாணவிகளும் காவல்துறையினரை எளிதில் அணுகும் விதமாக நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    கீழ்வேளூர் தாலுக்கா நிருபர் த.கண்ணன் 


    No comments