• Breaking News

    சுண்ணாம்பு குளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழா, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது

     


    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் சுண்ணாம்பகுளம் ஊராட்சி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் காமராஜ் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு  தலைமை ஆசிரியர் சரணி உதவி ஆசிரியர்கள் திலகவதி வெண்ணிலா சங்கர் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் ஏற்பாட்டில் பள்ளி மேலாண்மை குழு சார்பில்  110 மரக்கன்றுகள் அடையாள அட்டை , மற்றும் ஷூ காலனிகள் மாணவர்களுக்கு வழங்கினார்கள்.

     இப்பள்ளியில் பசுமை படை மாணவர்கள் ஒரு மரம் என் தாய்க்காக இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களின் அம்மா அவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி கல்வி வளர்ச்சி நாளாக மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

     இதில் ஜி சரஸ்வதி பாஸ்கர் முன்னாள் மாணவர்கள் பெற்றோர்கள் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர் .

    No comments