கோடியக்கரை கடற்கரையில் 150 கிலோ எடை கொண்ட டால்பின் இறந்த நிலையில் கண்டெடுப்பு
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடற்கரையில் மீன்பிடி சீசன் காலம் தொடங்கியுள்ளது. வரும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை கடற்கரை ஓரங்களில் டால்பின் மீன்கள் அதிக அளவில் காணப்படும்.
இவை பொதுவாக கடலின் ஆழமான பகுதிகளில் இருக்கும். ஆனால் அவ்வபோது கரையோர பகுதிகளுக்கும் வந்து மீன்களை உண்பது வழக்கமான ஒன்றாகும்.
இந்நிலையில் இன்று அதிகாலை கோடிய கரை புதிய கலங்கரை விளக்கம் அருகே உள்ள கடற்பரப்பில் மிகப்பெரிய டால்பின் ஒன்று இறந்து கிடந்துள்ளது.
இதனை அப்பகுதி வழியே சென்ற பொதுமக்கள் சிலர் கண்டு அதிர்ச்சியில் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பெயரில் விரைந்து வந்த வனத்துறையினர் டால்பின் மீனை கடலோரத்திலிருந்து இழுத்து கரைக்கு கொண்டு வந்தனர்.
மேலும் இறந்து கிடந்த டால்பின்மீன் சுமார் 7 அடி நீளமும் 150 கிலோ எடை கொண்டதாக இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் டால்பின் உயிரிழந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
No comments