நாம் தமிழர் கட்சியின் முக்கிய மாநில நிர்வாகிகள் கூண்டோடு விலகல்
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் பலரும் பிற கட்சியில் இருப்பவர்களை தங்கள் கட்சியில் இணைப்பது மற்றும் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் நாம் தமிழர் கட்சியிலிருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகி வருவதால் சீமான் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே பல நிர்வாகிகள் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி வரும் நிலையில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் கடந்த சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டவர்கள் என பலர் விலகியுள்ளனர். இவர்கள் கட்சியிலிருந்து விலகும் நிலையில் சீமான் மீது பல குற்ற சாட்டுகளை முன்வைக்கிறார்கள். அந்த வகையில் தற்போது மீண்டும் நாம் தமிழர் கட்சியில் இருந்த முக்கிய நிர்வாகிகள் சிலர் விலகி உள்ளனர்.
அதாவது மாநில ஒருங்கிணைப்பாளர் சிவகுமார், சுற்றுச்சூழல் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் முகமது அலி ஜின்னா, ஐடி விங் மாநில ஒருங்கிணைப்பாளர் வினோத் குமார் ஆகியோர் திடீரென கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். மேலும் இதை நாம் தமிழர் கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments