பாவூர்சத்திரத்தில் திமுக சார்பில் காமராஜர் பிறந்த தின விழா..... முன்னாள் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் மரியாதை.....
பாவூர்சத்திரத்தில் திமுக சார்பில் நடைபெற்ற காமராஜர் பிறந்த தின விழாவில் காமராஜர் சிலைக்கு முன்னாள் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்த தின விழா பாவூர்சத்திரத்தில் கொண்டாடப்பட்டது. பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள காமராஜரின் முழு உருவச்சிலைக்கு திமுக சார்பில் முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சீனித்துரை, பொதுக்குழு உறுப்பினர் அருள், யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை, ஒன்றிய கவுன்சிலர் சங்கர், நிர்வாகிகள் வினை தீர்த்தான், காந்திராமன், கபில்தேவதாஸ், பூதத்தான், பரத்பாண்டியன், அரிகிருஷ்ணன், சுரேஷ், ராஜாசிங், அருள்ஜுலியஸ், பெரியார் திலீபன், அருண்பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments