ஈரோடு வடக்கு திமுக மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம் தலைமையில் தவெக இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி, ஈரோடு வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதியில் உள்ள 50 மேற்ப்பட்ட தவெக இளைஞர் அணி அமைப்பாளர் (ம )நிர்வாகிகள் ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என். நல்லசிவம் தலைமையில் கோபிசெட்டிபாளையம் திமுக நகர செயலாளரும் , கோபிசெட்டிபாளையம் நகர மன்ற தலைவர் என். ஆர்.நாகராஜ் மற்றும் கோபி நகர நிர்வாகிகள் , கோபி நகராட்சி வார்டு உறுப்பினர்கள் முன்னிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தனர்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், சார்பு அணியினர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments