திருக்குவளை வன மஹோத்சவத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் மூலமாக பல்வேறு இடங்களில் டிம்பர் மரங்கள் மற்றும் அரச மரங்கள் நடவு செய்யப்பட்டன
மக்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மரம் வளர்க்கும் பழக்கத்தை ஊக்குவிக்கவும் ஆண்டுதோறும் ஜூலை முதல் வாரம் வன மகோத்சவம் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. மரங்களை வளர்ப்பதும், காடுகளை அழியாமல் காப்பதும் சுற்றுச்சூழல் பிரச்சினை களுக்கு சிறந்த தீர்வாக உள்ளது. என்பதால் மக்களுக்கு மரங்களை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது வனமஹோத்சவத்தின் முக்கிய நோக்கம். காவேரி கூக்குரல் இயக்கம் ஆண்டுதோறும் வனமஹோத்சவத்தை மரங்கள் நடவுசெய்து கொண்டாடி வருகிறது.
'ஒரு கிராமம் 5 அரச மரம்' என்ற திட்த்தின் மூலம் காவேரி கூக்குரல் யக்கம் ஒவ்வொரு கிராமத்திலும் அரச மரங்களை நடவு செய்துவருகிறது. அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை தாலுகா வலிவலம் ஊராட்சிக்கு உட்பட்ட காருகுடி கிராமத்தில் நடவு செய்யப்பட்டது.
வலிவலம் முன்னாள் ஊராட்சி தலைவர் மணிகண்டன் பங்கேற்று அரச மரத்தை நடவு செய்தார். இந்நிகழ்வில் வலிவலம் ஊராட்சி செயலர் சரவணன்,நாகப்பட்டினம் ஈசா களப்பணியாளர்கள் விக்னேஷ்,விஜய் , மகளிர் சுய உதவி குழு பெண்கள், பணித்தள பொறுப்பாளர்கள், இளைஞர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கீழ்வேளூர் தாலுக்கா நிருபர் த.கண்ணன்
No comments