• Breaking News

    பாவூர்சத்திரத்தில் மாவட்ட அளவிலான ரோல் பால் ஸ்கேட்டிங் போட்டியையூனியன் சேர்மன் தொடங்கி வைத்தார்


    பாவூர்சத்திரத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ரோல் பால் ஸ்கேட்டிங் போட்டி யூனியன் சேர்மன் காவேரிசீனித்துரை தொடங்கி வைத்தார்.

    தென்காசி மாவட்ட அளவிலான ரோல் பால் ஸ்கேட்டிங் சாம்பியன் ஷிப் விளையாட்டு போட்டிகள் பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது. இப்போட்டிகளை கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை தொடங்கி வைத்தார். மதுரை மாவட்ட ரோல் பால் அசோசியேஷன் தலைவர் ராபின் ராஜகாந்தன் நடுவராக இருந்து போட்டிகளை நடத்தினார் 11,14,17வயதுக்குட்பட்ட 3 பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டிகளில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து  கொண்டனர்.

    போட்டி தொடக்க விழாவில் தொழிலபதிபர் வைரசாமி, தென்காசி மாவட்ட ரோல் பால்  அசோசியேஷன் தலைவர்  விஜயன், திமுக ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அரிகிருஷ்ணன், ஆல்வின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் பாவூர்சத்திரம் வெஸ்டர்ன் கார்ட்ஸ் இந்தியன் அகாடமி முதல்வர் கலைமதி கணேஷ் நன்றி கூறினார். முடிவில் பயிற்சியாளர் கணேஷ் செய்திருந்தார்.

    No comments