கும்மிடிப்பூண்டியில் டி.கே.வரதராஜன் ஆசான் உக்ரி சிலம்ப கலைக்கூடம் சார்பில் 130 மாணவர்கள் இணைந்து 20 நிமிடம் ஸ்டார் தீ பந்தம் சுற்றி உலக சாதனை நிகழ்த்தினார்கள்
திருவள்ளூர் மாவட்டம்.கும்முடிப்பூண்டி பேரூராட்சியில் .டி கே.வரதராஜ் ஆசான் உக்ரி சிலம்ப கலைக்கூடம் யுனிகோ வேல்ட் ரெக்கார்ட் நிறுவனம் இணைந்து நடத்திய உலக சாதனை விழாவில் 130 சிலம்பாட்ட மாணவர்கள் பங்கேற்று தொடர்ந்து இருபது நிமிடம் ஸ்டார் தீபந்தம் சுற்றி உலக சாதனை நிகழ்த்தினார்கள்.
இவ்விழாவினை துவங்கி வைத்த கும்முடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ கோவிந்தராஜன் அவர்கள் விழாவினை தொடங்கி வைத்து உலக சாதனை நிகழ்த்திய மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி மாணவர்களை பாராட்டி பேசினார் விழாவில் கும்முடிப்பூண்டி பேரூராட்சி தலைவர் சகிலா அறிவழகன் துணைத்தலைவர் கேசவன் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கிராம பெரியோர்கள் முன்னிலை வகுத்தனர் இவ்விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த தலைமை ஆசான்கள் கெ.ஞானமூர்த்தி .கெ.ஏழுமலை .கெ.ரவி பயிற்சியாளர் வினோத்குமார் மற்றும் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கிய ரவி, கண்ணன் சதாசிவம், சுரேஷ், மற்றும் மாணவர்களுடைய பெற்றோர்கள் பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.
ஒரே நேரத்தில் 130 மாணவர்கள் தீப்பந்தம் சுற்றியது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த பிரமிப்பை ஏற்படுத்தியது .இந்த உலக சாதனை விழாவில் உலக சாதனை நிகழ்த்திய சிலம்பாட்ட மாணவர்களுக்கு யுனிகோ வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனத்தின் உடைய இயக்குனர் . சிவராமன் அவர்கள் முதல் உலக சாதனைக்கான சான்றிணைவழங்கி சிலம்பாட்ட மாணவர்களை பாராட்டி பேசினார் இந்நிகழ்ச்சிகள் வழக்கறிஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments