துரோகின்னு சொன்னதுக்கு பதிலா, விஷம் கொடுத்திருந்தா செத்து போயிருப்பேன்..... மனவேதனையில் மல்லை சத்யா பேட்டி.....
சமீபகாலமாக, மல்லை சத்யா குறித்த விமர்சனங்கள் கடுமையாக எழுந்துள்ளன. குறிப்பாக பிரபாகரனுக்கு துரோகம் செய்த மாத்தையாவுடன் மல்லை சத்யாவை ஒப்பிட்டு சிலர் விமர்சனம் செய்ய, அதற்கும் அதற்கு அப்பாற்பட்ட பல விமர்சனங்களுக்கும் அவரது மனம் மிகவும் புண்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இந்த சூழலில், புதிய தலைமுறைக்கு வழங்கிய நேர்காணலில் கண்ணீருடன் நொந்த உணர்வுகளை கண் கலங்கும் வார்த்தைகளில் பகிர்ந்துள்ளார்.
அதில் , “துரோகின்னு சொன்னதுக்கு பதிலா, கொஞ்சம் விஷம் கொடுத்திருந்தா கூட செத்து போயிருப்பேன். அது நிம்மதியான மரணம். ஆனால் இப்போ என் மேல ஒரு தீராத பழியை சுமத்திட்டார்” என்று உணர்ச்சி மிகுந்து கூறிய மல்லை சத்யா, “அவர் உயர்ந்த தலைவர். பெரிய பார்லிமெண்டேரியன். ஆனால் என்னைப் பற்றி தவறுகள் இருந்தால் கூறுங்கள் ஆனால் துரோகி என்று கூறியதை தாங்கமுடியவில்லை ” என தெரிவித்துள்ளார்.
“ஒரு காலத்தில் நான் செத்து போயிருந்தாலும், எனக்கொரு நிலைத்த பெயர் இருந்திருக்கும். ஆனா இப்போ என் மீது ‘துரோகி’னு ஒரு குற்றப்பதக்கம் சுமத்தப்பட்டிருக்கிறது. இது என் மனசை அவ்வளவு வேதனையுடன் நொந்து போக வைக்கிறது . நா இன்னும் உயிரோட இருக்கிறேனேனு தான் இது தெரியுது. நா இறந்திருந்தா கூட அது நிம்மதியா இருக்கும்” என்று கண்கலங்கிய குரலில் பேசியுள்ளார்.
No comments