• Breaking News

    மயிலாடுதுறை அடுத்த கோமல் பெரட்டக்குடி கிராமத்தில் பழமை வாய்ந்த சித்தி விநாயகர்,பழனி ஆண்டவர்,ஆஞ்சநேயர் ஆலய கும்பாபிஷேகம்..... ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு


    மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த கோமல் பெரட்டக்குடி கிராமத்தில் ஓங்கார மகரிஷி அதிஷ்டானம்,சித்தி விநாயகர்,பழனி ஆண்டவர்,ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது இந்த ஆலய கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.

     இதனை முன்னிட்டு கடந்த 11 தேதி முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வந்தன இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்த நிலையில் யாக குண்டத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் மேளதாள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு விமான கும்பத்தை அடைந்தது பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி கோபுர கலசங்களுக்கு புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.

     அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அருள் பிரசாதங்கள் வழங்கப்பட்டன இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டுச் சென்றனர்.

    No comments