• Breaking News

    சரக்கு ரயில் தீ விபத்து..... சிலிண்டர் தூக்கி, சாப்பாடு கொடுத்து ஆறுதல் கூறிய அமைச்சர்.....

     


    திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மற்றும் அரக்கோணம் வழித்தடத்தில் திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீப்பிடித்து ஐந்து பெட்டிகள் பற்றி எரிந்தது. இந்த கோர விபத்தால் சென்னை அரக்கோணம் வழித்தடத்தில் தற்போது ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

    பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் பிரதாப், மாவட்ட எஸ்பி சீனிவாச பெருமாள், அமைச்சர் நாசர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறும்போது, சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீ பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

    ஒரு கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என கூறியுள்ளார். பின்னர் அமைச்சர் மாவட்ட ஆட்சியரிடம் தீயணைப்பு பணி குறித்து கேட்டறிந்தார்.விபத்து நடந்த இடத்திற்கு அருகில் இருக்கும் வீடுகளில் இருந்து சமையல் சிலிண்டர்கள் அகற்றப்பட்டது. சிலிண்டரை எடுத்துச் செல்ல அந்த பகுதி மக்களுக்கு அமைச்சராக உதவினார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி உணவு வழங்கியுள்ளார்.

    No comments