பாவூர்சத்திரத்தில் மாவட்ட செயலாளர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த நாம் தமிழர் கட்சியினர்
தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 25 இளைஞர்கள் அக்கட்சியை விட்டு விலகி அதிமுகவில் இணைந்தனர்.
பாவூர்சத்திரத்தில் உள்ள தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆலங்குளம் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் பாண்டியன், கிளை செயலாளர் பாஸ்கர், பொருளாளர் ஆரோக்கியசாமி, அதிமுக நிர்வாகி தர்மர் ஆகியோர் ஏற்பாட்டில் ஆலங்குளம் வடக்கு ஒன்றியத்திற்க்கு உட்பட்ட வாடியூர் பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் இளைஞர்கள் 25 பேர் அக்கட்சியை விட்டு விலகி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ்பாண்டியன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
No comments