திருவள்ளூர்: பழவேற்காட்டில் மீன் மற்றும் நண்டு வளர்ப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பிரதாப் நேரில் ஆய்வு - MAKKAL NERAM

Breaking

Thursday, July 17, 2025

திருவள்ளூர்: பழவேற்காட்டில் மீன் மற்றும் நண்டு வளர்ப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பிரதாப் நேரில் ஆய்வு


திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை மற்றும் கேரளா,கொச்சின் தேசிய மீன்வள மரபணு செயலகம் பிராந்திய ஆராய்ச்சி மையம் சார்பில்  பழங்குடியினர் வாழ்வாதாரத்தை மேம்படுத்த  தொல்குடி யினர் வேளாண்மை மற்றும் மேலாண்மை திட்டத்தின் படி மீன் மற்றும் நண்டு வளர்ப்பு பணிகள் துவங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.செஞ்சியம்மன் நகர் பழங்குடியினர் கிராமத்தில் நடைபெற்று வரும் இப்பணிகள் குறித்து அப்பகுதி மக்களிடமும் அரசு துறை அதிகாரிகள் இடமும் கேட்டறிந்தார்.அப்போது கோட்டைக்குப்பம்,ஆண்டிக்குப்பம்,நடுவூர் மாதா குப்பம், டாக்டர் அம்பேத்கர் நகர் கிராமங்களை சேர்ந்த நிர்வாகிகள் தங்கள் கிராமங்களில் மக்கள் தொகை அதிகரித்து வருவதால் வீட்டுமனை தேவை என கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு இதனை கொண்டு சென்று அதன் மூலம் நிலம் கண்டறிந்து இப்பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என கூறினார்.இந்த பண்ணை அமைக்கும் திட்டம் அரசுக்கு எதிரான சொந்தமான நிலங்களில் அரசு சார்பில் நடைபெறுவதால் இதனை யாரும் தடுக்க முயற்சிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

இந்த நிகழ்வின் போது தமிழ்நாடு பழங்குடியினர் நலத்துறை இயக்குனர், பொன்னேரி சாராட்சியர் ரவிக்குமார்,வட்டாட்சியர் சோமசுந்தரம், பொன்னேரி உதவி ஆணையர் சங்கர், மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி,பொன்னேரி ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் சித்ரா,திருப்பாலைவனம் காவல் ஆய்வாளர் காளிராஜ் உள்ளிட்ட ஏராளமான அதிகாரிகள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment