மதுவிலக்கு டிஎஸ்பியின் காரை பறித்தாரா அமைச்சர் மெய்யநாதன்..? - MAKKAL NERAM

Breaking

Thursday, July 17, 2025

மதுவிலக்கு டிஎஸ்பியின் காரை பறித்தாரா அமைச்சர் மெய்யநாதன்..?

 


மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் கார் இல்லாமல் நடந்தே செல்லும் வீடியோ இணையத்தில் பரவியதை தொடர்ந்து, சமூக ஊடகங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.இந்த நிலையில் கார் பறிக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்று டிஎஸ்பி சுந்தரேசன் விளக்கம் அளித்துள்ளார்.

மயிலாடுதுறையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணியாற்றி வரும் துணை காவல் கண்காணிப்பாளர் சுந்தரேசன், அலுவலகத்திற்கு காரின்றி நடந்துசெல்லும் வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதைத் தொடர்ந்து, “டிஎஸ்பிக்கு அரசு வாகனம் கொடுக்கப்படவில்லை என்பதால்தான் இவர் அலுவலகத்துக்கே நடந்துசெல்கிறார்” என்ற செய்திகள் வைரலானது.

இந்த வீடியோவைத் தொடர்ந்து, காவல் துறையினரின் மீது சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. பொதுமக்கள் சிலர், “உயரதிகாரிக்கு கூட அரசு வசதிகள் இல்லையெனில், சாதாரண போலீசாரின் நிலை என்னவாக இருக்கும்?” என கேள்வி எழுப்பினர். இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பு அதிகாரிகள் இதற்கான விளக்கத்தை வெளியிட்டுள்ளனர்.

போலீசாரின் விளக்கத்தின்படி, டிஎஸ்பி சுந்தரேசனுக்கு அரசு சார்பு வாகனம் வழங்கப்பட்டிருந்தது. கடந்த 11ம் தேதி தொழில்நுட்ப காரணங்களால் அந்த வாகனம் திரும்ப பெறப்பட்டது. சில நாட்களுக்குள் அதே வாகனம் மீண்டும் திருப்பி வழங்கப்பட்டது. தற்போது அவர் பயணிக்கும் வாகனம் முறையாக வழங்கப்பட்டு உள்ளது. சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ DSP-யின் அலுவலக நுழைவுப் பகுதியை சுற்றியது. ஆனால் அது அவர் நடைபயணம் செய்ததற்கான உறுதியான ஆதாரம் அல்ல. இது போல தவறான தகவல்களை பரப்புவது பொதுமக்களில் தவறான புரிதலை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் டிஎஸ்பி சுந்தரேசன் தரப்பில் கூறுகையில்," கடந்த 5ந் தேதி அமைச்சர் மெய்யநாதன் பாதுகாப்பு பணி கான்வாய்க்கு எனது வாகனத்தை கேட்டனா். என்னிடம் வேறு வாகனங்கள் கிடையாது. மேலும் கசெட்டட் அதிகாரியான என்னிடம் உள்ள வாகனத்தை அமைச்சர் கான்வாயில் பயன்படுத்த புரோட்டோகால் கிடையாது. இதுகுறித்து அவர்களிடம் கூறி மறுத்துவிட்டேன். எனினும் என்னிடம் தொடர்ந்து வாகனத்தை கொடுக்கும்படி கேட்டனா்.

நான் கொடுக்க மறுத்துவிட்டேன். எந்தவொரு ஆர்டர் இல்லாமல் என்னால் வாகனத்தை கொடுக்க முடியாது. உத்தரவு போட்டால் தான் நான் கொடுக்க முடியும். எனினும் உடனே என்னை வாகனத்தை ஒப்படைக்கும்படி கூறினா். இதற்கு நான் மறுத்தேன். உடனே என்னை திருச்செந்தூதில் பந்தோபஸ்து பணிக்கு மாற்றினா். உடனே நான் அங்கு சென்றேன். பின்னர் எனக்கு திருவாரூர் பந்தோபஸ்துக்கு செல்லும்படி உத்தரவு வந்தது.

உடனே நானும் அங்கு சென்று 3 நாட்கள் பணி செய்து வந்தேன். மயிலாடுதுறைக்கு வந்த பிறகு, மீண்டும் எனது வாகனத்தை கொடுக்கும்படி அமைச்சர் மெய்யநாதன் தரப்பில் கேட்கப்பட்டது. பின்னர் எனது வாகனத்தை வாங்கி கொண்டனா். கடந்த 10ந் தேதி வாங்கப்பட்ட எனது வாகனம் இன்று வரை என்னிடம் வழங்கப்படவில்லை" என்றார்.

மேலும் பேசுகையில், நான் மதுவிலக்கு பிரிவுக்கு வந்த பிறகு அவர்களுக்கான சாராய சப்ளை தடைப்பட்டுவிட்டது. இதனால் லஞ்சம் கிடைக்காமல் திணறி வருகின்றனா். எனவே என்னை குறிவைத்து தொடர்ந்து இடையூறு செய்கின்றனா். எனது துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், விரலை காட்டி, கொஞ்சம் வலைந்து கொடுங்கள் இல்லையென்றால் உடைத்துவிடுவார்கள் என மிரட்டுகிறார். ஒரு அதிகாரியை இப்படியா மிரட்டுவது. என்மீது எந்த விசாரணையும் இல்லை என்று தெரிவித்தார்.

 காவல்துறை சார்பில் அளிக்கப்பட்ட மறுப்பு செய்தி ......



No comments:

Post a Comment