வீரகேரளம்புதூரில் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்..... ஒன்றிய இளைஞரணி ஏற்பாடு.....
வீரகேரளம்புதூரில் ஒன்றிய இளைஞரணி சார்பில் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் திமுக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் வீரகேரளம்புதூரில் நடைபெற்றது. ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாரத்பாண்டியன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் சீனித்துரை, செயற்குழு உறுப்பினர் ஜேசுராஜன் முன்னிலை வகித்தனர். இளைஞரணி துணை அமைப்பாளர் வேல்ராஜ் விக்னேஷ் வரவேற்றார். துணை அமைப்பாளர் பாலாஜி தொகுப்புரை ஆற்றினார்.
மாநில பேச்சாளர் கவிஞர் மூர்த்தி, கடையநல்லூர் இஸ்மாயில், மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ், இளைஞரணி துணை அமைப்பாளர் சுரேஷ் பேசினர். கூட்டத்தில் கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை, ஒன்றிய கவுன்சிலர்கள் நான்சி, தர்மராஜ், ஹேமா, துணை செயலாளர் டால்டன், இளைஞரணி துணை அமைப்பாளர் ஹரிகிருஷ்ணன், சுப்பிரமணியன், ஜெபசிங், கண்ணன்,காலசாமி, மாரியம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இளைஞரணி துணை அமைப்பாளர் அசோக்குமார் நன்றி கூறினார்.
No comments