• Breaking News

    நாகை: 15 நாட்களுக்குள் நூறு நாள் வேலை வேண்டி போராட்டம்

     


    நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் ஊராட்சி ஒன்றியம் பிரதாப ராமபுரம் கிராம ஊராட்சியில் 2000க்கும் மேற்பட்ட பெண்கள் 100 நாள் வேலைத்திட்ட மூலமாக வேலை வேண்டும் என்ற நோக்கில் வேலை கேட்பு படிவத்தை பூர்த்தி செய்து பதிவுத்தபால் மூலமாக வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களுக்கு கோரிக்கை வைத்தனர். 

    மேற்கண்ட திட்டத்தின் படி ஒரு பணியாளர் வேலை கோரிய 15 தினங்களுக்குள் வேலை வழங்கப்பட வேண்டும் .வழங்கப்பட தவறும் பட்சத்தில் அரசு , வேலை கேட்ட நாட்களுக்கு பாதி ஊதியத்தை சம்பந்தப்பட்ட உறுப்பினரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும். 30 நாட்களுக்குள் வேலை வழங்க தவறினால் முழு ஊதியத்தை வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும். 

     மேலும் பிரதாப ராமபுரம் ஊராட்சியில் 2159 பணியாளர்கள் MGNREGS திட்டத்தின் கீழ்  ஆண்டிற்கு நூறு நாட்கள் வேலை செய்து வருகின்றனர். கடந்த ஐந்து  நிதி ஆண்டுகளாக தோராயமாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் மனித சக்தி நாட்களுக்கு வேலை வழங்கப்பட்டு வந்தது. தோராயமாக ஒவ்வொரு நிதி ஆண்டிலும் மூன்று முதல் நான்கு கோடி வரை ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது.இந்நிலையில் 2025-26 நிதியாண்டில் மூன்று மாதம் முடிவடைந்த நிலையில் இதுவரை 1725   மனித சக்தி நாட்களுக்கு ஊதியமாக ரூபாய் 6,23,000 மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது கண்டனத்திற்குரியது. கடந்த வருடம் துவக்கத்தில் 20 கோடி மனித சக்தி நாட்களை வழங்கிய மத்திய அரசு இந்த ஆண்டு 12 கோடி மட்டுமே வழங்கி உள்ளது மேலும் வழங்கிய 12 கோடி மனித சக்தி நாட்களும் மாநில அரசும் , மக்கள் பிரதிநிதிகள் இல்லாத அலுவலர்களின் உள்ளாட்சி அமைப்புகளின் அலட்சியத்தால் MGNREGS திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படாமல் தோல்வியடைந்துள்ளது. 

    இத்திட்டம் என்பதை விட இது ஒரு சட்டம், 18 வயது நிரம்பிய குறிப்பாக 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் உறுப்பினர் அட்டை பெரும் பட்சத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 100 நாள் வேலை வழங்குவது அரசின் கடமையாகும். மத்திய மற்றும் மாநில அரசுகள் அரசின் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதைப் போல 100 நாள் வேலை திட்டத்திற்கும் நிதியை ஒதுக்க வேண்டும். கிராமப்புறங்களில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான மக்கள் 100 நாள் வேலைத் திட்டத்தை மட்டுமே இருந்து வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளாக பட்டினி சாவு இல்லாமல் இருப்பதற்கு 100 நாள் வேலை திட்டம் மிக முக்கிய காரணமாகும் குறிப்பாக குழந்தைகளின் ஆதரவின்றி தனித்துவிடப்பட்ட முதியவர்கள்,  கணவரை இழந்து தனிநபராக குழந்தைகளை வளர்த்தெடுக்கும் தாய்மார்களின் வாழ்வாதாரம் 100 நாள் வேலைத் திட்டத்தின் சார்ந்து இருக்கிறது.

     எளிய மக்கள் அன்றாட உணவு தேவைக்கும் சமுதாயத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கும் இத்திட்டம் அத்தியாவசியமான ஒன்றாகும் எனவே மாநில மற்றும் மத்திய அரசுகள் கூடுதல் மனித சக்தி நாட்களை வழங்குவதற்கும் கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்வதற்கும் முன் வர வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்தனர்.  சுமார் 2000-க்கும் மேற்பட்ட பெண்கள் மேற்கண்ட நிகழ்வில் மூலமாக வேலை கூறி விண்ணப்பித்துள்ளனர். நிகழ்வினை கிராம ஊராட்சியின் முன்னாள் தலைவர் திரு R.V.S. சிவராசு அவர்கள் ஒருங்கிணைத்தார்.நன்றி.

    No comments