சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஆண்ட்ரூ ரசல் ஓய்வு
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற ஆல்ரவுண்டர் ஆன்ட்ரே ரசல். ஜமைக்காவை சேர்ந்த இவருக்கு 37 வயது ஆகும் நிலையில் தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்தது ஆஸ்திரேலியா உடன் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது.
இதன் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய பிறகு ரசல் ஓய்வு பெற இருக்கிறார். கடந்த 2010 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான ரசல் இதுவரை ஒரு டெஸ்ட் போட்டி, 56 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 84 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
மேலும் இந்த நிலையில் அவர் தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments