நாகை: மதுபான கடை திறப்பதற்கு எதிராக கையெழுத்து போராட்டம்..... மாவட்ட ஆட்சியரிடம் மனு
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் மருதூர் மற்றும் பஞ்சநதிக்குளம் கிழக்கு கடைத்தெருவில் அரசு மதுபானக் கடை திறப்பதற்கு எதிராக 15/07/25 செவ்வாய்கிழமை மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தி 300 மேற்ப்பட்ட மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடைப்பெற்று இன்று 16/07/25 புதன் கிழமை நாம் தமிழர் கட்சியின் சார்பில் 20க்கும் மேற்பட்ட கட்சியின் தலைமை பொறுப்பாளர் மாவட்ட ஆட்சியர் ஆகாஷை நேரில் சந்தித்து முதற்கட்டமாக மனு அளிக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.அப்படி உறுதி அளித்த வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் மதுக்கடை திறப்பதற்கு மீண்டும் முயற்சிகள் நடந்தால் இரண்டாம் கட்டமாக மக்களை திரட்டி சாலை மறியல் மற்றும் மக்கள் திரள் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்து கொள்கிறோம்.என பேட்டி அளித்தனர். இந்நிகழ்வில் ஆ.முருகவேல் (மண்டல செயலாளர்),வே.அறிவொளி (மாநில பொறுப்பாளர்),செ.விஜயேந்திரன் (மாவட்ட தலைவர்),ம.காத்தமுத்து ( மாவட்ட செயலாளர்),க.சிவக்குமார் (தகவல் தொழில்நுட்ப செயலாளர்),சு.முருகையன் (மண்டல செயலாளர்),க.முருகாணந்தம்(செய்தி தொடர்பாளர்),பி.ஜெகதீசன் ( மாவட்ட சுற்றுசூழல் பாசறை) கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் நிருபர்:
ஜி.சக்கரவர்த்தி
விளம்பர தொடர்புக்கு
9788341834
No comments